பழங்குடியின பள்ளி மாணவ மாணவிகளுக்கான தடகள போட்டிகள் உதகையில் துவங்கியது…
இந்த தடகள போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ மாணவிகள் சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான தடகள போட்டிகளில் பங்கேற்க உள்ளனர் மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் நிலவும் காலநிலையில் இங்கு பயிற்சி மேற்கொள்ளும் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பலர் தேசிய அளவில் மாநில அளவிலும் பங்கேற்று வருகின்றனர்.
இந்நிலையில் நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள சிறப்பு மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட திறந்தவெளி மைதானத்தில் பழங்குடியின மாணவ மாணவிகளுக்கான தடகளப் போட்டிகள் IHEA அசோசியேஷன் சார்பில் துவங்கி நடைபெற்றது.
இப்போட்டிகளில் 10, 12, 14, 16, 19 ஆகிய வயதுக்குட்பட்டோர் ஐந்து பிரிவுகளாக தடகள போட்டிகள் நடைபெற்றது.இதில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இதில் வெற்றி பெறும் மாணவ மாணவிகள் சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான தடகளப் போட்டிகளில் பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.