தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அருகே உள்ள அஸ்தகிரியூர் கிராமத்தில், வழிப்பாதை ஆக்கிரமிப்பு தொடர்பாக உள்ளூர் மக்கள் கடும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.
2021ஆம் ஆண்டில், அரசு திட்டத்தின் கீழ் அஸ்தகிரியூரில் காளியப்பன் மனைவி நதியா மற்றும் நஞ்சப்பன் மனைவி மாரிமுத்து ஆகியோருக்குச் சொந்தமான இரு குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனைகள் வழங்கப்பட்டன. அதன் பின்னர் அவர்கள் அந்த இடங்களில் வீடுகளை கட்டி தங்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.
இதேப் பகுதியில் காலியாக இருந்த சில பகுதிகளை அங்குள்ள 30 குடும்பங்களுக்கு வீட்டு மனையாக அரசு வழங்கியுள்ளது.எனினும், அந்த இடங்களின் அருகிலுள்ள சில காலி நிலங்களை அம்மாசி , என்பவர்அரசால் வழங்கப்பட்ட வழிப்பாதை பகுதியையும் ஆக்கிரமித்துள்ளதாக கூறப்படுகிறது.
அவர் அந்த வழிப்பாதையில் கற்கள் அடுக்கி விட்டு, வாழைமரங்கள் மற்றும் பிற தாவரங்களை நட்டு, அங்கு செல்வோருக்கு இடையூறு விளைவிக்கிறார் என குடியிருப்போர் குற்றம்சாட்டுகின்றனர்.
மேலும், அந்தப் பாதையைப் பயன்படுத்த முயற்சிக்கும் பொதுமக்களை மிரட்டும் நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருவதாகவும் தெரிகிறது.இதுகுறித்து பலமுறை வருவாய்துறை அதிகாரிகளிடம் புகார் செய்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று குடும்பங்கள் தெரிவித்துள்ளன.
இதனால் வழிப்பாதை தடைப்பட்டுள்ளதால் அங்குள்ள மக்கள் தினசரி நடமாட்டத்தில் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர் ஆக்கிரமிப்பு விவகாரத்தை வருவாய்த்துறை முழுமையாக விசாரித்து, பொதுமக்கள் பயன்பாட்டுக்கான வழிப்பாதையை சீரமைத்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர்கள் முன்வைத்துள்ளனர்.