செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அருகே உலக சுற்றுச்சூழல் தினத்தை
யொட்டி உத்தமநல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு இயற்கை சுற்றுச்சூழல் சார்பில் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.


தமிழ்நாடு இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் சார்பில் மாநில தலைவர் ஜி.முனுசாமி தலைமையில்
பள்ளி மாணவர்களுடன் இணைந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.
அதனை தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.


அப்போது துணைத் தலைவர் சிதம்பரம் வர்த்தக அணி மாநிலத் தலைவர் எஸ்.மதி
மாநில துணை செயலாளர் பா.முனுசாமி மாவட்ட செயலாளர் து.தனசேகரன் ஒன்றிய தலைவர் எம்.விஜய் மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பொறுப்பு தலைமை ஆசிரியர் ரா.கீர்த்தனா ராமச்சந்திரன் எஸ்.எம்.சி. ஆசிரியர் சுமதி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *