மாணவ, மாணவிகள் சைக்கிளில் ரேஸ் ஓட்ட கூடாது சாலை விதிகளை பின்பற்ற வேண்டும் என திருவாரூர் அருகே இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சியில் ஆட்சியர் மோகனசந்திரன் பேச்சு.

திருவாரூர் மாவட்டம் அரசு கொரடாச்சேரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்விதுறை சார்பில் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது .
இதில் பள்ளி மாணவிகள் 167 , மாணவர்கள் 93 மொத்தம் 263 இலவச சைக்கிள் வழங்கப்பட்டது இதனை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனசந்திரன் மற்றும் திருவாரூர் திமுக மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் இணைந்து மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கினர்.
இதனை தொடர்ந்து கலைத் திருவிழாவில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார்கள் இதைப்போல் திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற மாணவிக்கு பொன்னாடை போற்றி மரியாதை செலுத்தப்பட்டது.
தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் மோகனசந்திரன் மாணவ மாணவிகள் மத்தியில் பேசியபோது. மாணவ, மாணவிகள் சைக்கிளில் ரேஸ் ஓட்ட கூடாது எதிரே வருபவர்கள் பாதிக்கபடுவார்கள் சாலை விதிகளை பின்பற்ற வேண்டும், பாதுகாப்பாக சைக்கிள் ஓட்ட வேண்டும் , தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று பெற்றோர்கள் மற்றும் பள்ளிக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவபிரியா , பள்ளி தலைமை ஆசிரியர் பூந்தமிழ்பாவை மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.