நாகப்பட்டினம்,ஜூன்.5-
கர்நாடகா அரசு காவிரியின் குறுக்கே மேகதாட்டுவில் புதிய அணை கட்ட முயலும் கர்நாடக மாநில முதல்வர் டி.கே.சிவக்குமாரின் உருவபொம்மையை எரித்து விவசாயிகள் நாகை பனங்குடி பகுதியில் இன்று தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ள சூழலில், அம்மாநில முதல்வர் மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் எனத் தமிழ்நாட்டிற்கு எதிரான நிலைப்பாட்டைத் தீவிரமாக எடுத்து வருகிறார். இதனால், மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து முற்றிலுமாக முடங்கும் என்றும், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் விவசாயம் முற்றிலும் அழிந்து, கடுமையான குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் என்றும் விவசாயிகள் குற்றம்சாட்டினர்.


அதேவேளையில், மேகதாட்டு விவகாரத்தில் காங்கிரசுடன் கூட்டணி வைத்துக்கொண்டு மௌனம் காப்பதாக தமிழகத்தில் உள்ள தவெக அரசு மற்றும் அதன் முதல்வர் விஜய் ஆகியோருக்கு எதிராக விவசாயிகள் கண்டன கோஷங்களை எழுப்பினர். கர்நாடக அரசுக்கும், தமிழக தவெக அரசுக்கும் எதிராக கண்டன கோஷங்களை எழுப்பிய விவசாயிகள், தமிழகத்தின் வாழ்வாதாரத்தை காக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *