நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் (சொசைட்டி) முன்பு தேர்தல் வாக்குறுதியின் படி விவசாய கடன் முழுவதும் தள்ளுபடி செய்யாமல் ஏமாற்றி விவசாயிகளை வஞ்சிக்கும் தவெக அரசை கண்டித்து அஇஅதிமுக சார்பில் ஒன்றிய MGR இளைஞரணி செயலாளர்,முன்னாள் கூட்டுறவு சங்க துணை தலைவர் ஆர்.ரவிக்குமார் தலைைமயில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைப்பெற்றது.
கீழ்வேளூர் வடக்கு ஒன்றிய செயலாளர் எம்.சிவா கண்டன உரையாற்றினார். ஆர்பாட்டத்தில் பேரூர் கழக செயலாளர் ஜே.பி முரளி, ஒன்றிய பொருளாளர் கே.கலியமூர்த்தி, ஒன்றிய MGR மன்ற செயலாளர் ஏ.கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட அம்மா பேரவை து.செயலாளர் ஆர்.முருகன், ஒன்றிய விவசாய அணி ஏ.துரைராஜ், ஒன்றிய மாணவர் அணி கே.கோபாலகிருஷ்ணன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் என். ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன கோசமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் ஒன்றிய நிர்வாகிகள், வார்டு கிளைக் கழக நிர்வாகிகள், பிற அணி பொறுப்பாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளில் முன்னாள் தலைவர்கள், அனைத்து விவசாய பிரிவு பொறுப்பாளர்கள், கழக செயல் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.