உணவுத்துறை தொடர்பான தொழில் முனைவோர்களை இணைக்கும் வகையில் கோவையில் ஃபுட் பிரெனர் அமைப்பு துவக்கம்
சிறுநீரக நோய் பாதித்தவர்களுக்கு உதவும் நோக்கில் சுகா (SUKA) சேரிட்டபிள் டிரஸ்ட் சார்பாக புதிய முயற்சி
சிறுநீரகம் தொடர்பான நோய்கள் தற்போது அதிகரித்து வரும் நிலையில் பொருளாதார நிலையில் பின்தங்கியோர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மற்றும் அது தொடர்பான நோய்க்கு சிகிச்சை செய்வதில் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்..
இது போன்று சிறுநீரகம் தொடர்பான நோய்களில் பாதித்தவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான உதவிகளை கோவையில் செயல்பட்டு சுகா (SUKA) சேரிட்டபிள் டிரஸ்ட் வழங்கி வருகிறது..
இந்நிலையில் புதிய முயற்சியாக உணவு துறை தொடர்பான தொழில் துறையினரை இணைத்து, இந்த சமூக பணியை கூடுதலான நபர்களுக்கு கொண்டு செல்லும் வகையில் புதிய அமைப்பை உருவாக்கி உள்ளனர்…
(SUKA CIRCLE Foodpreneur) சுகா சர்க்கிள் ஃபுட்பிரனெர் எனும் அமைப்பாக துவங்கி உள்ள இதில்,கோவை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் உணவு தொடர்பான தொழில்களில் ஈடுபட்டு வரும் பல்வேறு துறையினரை உறுப்பினர்களாக இணைத்துள்ளனர்…
இந்நிலையில் இதற்கான துவக்க விழா பிராட்வே மேக்னஸ் ஓட்டல் அரங்கில் நடைபெற்றது…
இதில் பேசிய அவ்வமைப்பின் தலைவர் ராஜன் ஆறுமுகம், சிறுநீரகம் தொடர்பான நோய்களுக்கு தீர்வு காண்பது மற்றும் நிதி உதவிகளை சுகா சேரிட்டபிள் டிரஸ்ட் தொடர்ந்து செய்து வருவதாக கூறிய அவர், இது போன்ற சமூக நல பணிகளை இன்னும் கூடுதலான நபர்களுக்கு செய்யும் வகையில் இந்த ஃபுட்பிரனர் அமைப்பு உறுதி செய்யும் என தெரிவித்தார்..
அதே நேரத்தில் சமூக நலன் கருதி வரும் தொழில் முனைவோர்கள் இந்த அமைப்பின் வாயிலாக தங்களது தொடர்பு கொண்டு தங்களது தொழில்களை மேம்படுத்த உதவும் வகையில் ஃபுட்பிரெனர் அமைப்பை உருவாக்கி உள்ளதாக தெரிவித்தார்..
இனி வரும் காலங்களில் இதே போல வெவ்வேறு துறை சார்ந்த தொழில் முனைவோர்கள் அமைப்பை உருவாக்கி சர்வதேச அளவில் கடுமையான சிறுநீரக செயலிழப்பு மற்றும் இறுதி-நிலை சிறுநீரக நோய் உள்ளவர்களுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கான உதவிகளை சுகா சேரிட்டபிள் டிரஸ்ட் கூடுதலாக செய்ய உள்ளதாக அவர் கூறினார்..
இந்த சந்திப்பின் போது ,சுகா சேரிட்டபிள் டிரஸ்ட் நிறுவனர்கள் சந்தோஷ் குமார்,ராதா ஜனனி நிர்வாகிகள் சரவணா வெங்கடேஷ்,சண்முகராஜ்,வீரமணிகண்டன்,காஜா மொய்தீன்,யுவராஜ் ,பார்கவி உட்பட பலர் உடனிருந்தனர்..