கோவையில் செயல்பட்டு வரும் சி.பி.இ.கொல்கத்தா கிரிக்கெட் கிளப் நான்காவது ஆண்டு துவக்க விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.ஒவ்வொரு ஆண்டும் வங்கதேச தொழிலாளர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் பங்கு பெறும் கிரிக்கெட் போட்டிகளை கொல்கத்தா கிரிக்கெட் கிளப் ஒருங்கிணைத்து வருகின்றனர்..

இந்நிலையில் சி.பி.இ.கொல்கத்தா கிரிக்கெட் கிளப் (CBE KOLKATTA CRICKET CLUB) சார்பாக இரத்த தான முகாம் மற்றும் பொது மருத்துவ முகாம் இடையர் வீதி மராத்தா பவன் அரங்கில் நடைபெற்றது…

அரசு மருத்துவமனையுடன் இணைந்து,சி.பி.இ.கொல்கத்தா கிரிக்கெட் கிளப் ஒருங்கணைப்பாளர்கள் இர்ஃபான்,ஷாரூக்,நஸ்ரூதின் ஆகியோர் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இதில்,நூற்றுக்கும் மேற்பட்ட கிளப் உறுப்பினர்கள் இரத்ததானம் செய்தனர்

இதே போல பொது மருத்துவ முகாம் நடைபெற்றது இதில்,மருத்துவ பரிசோதனை,ஹீமோகுளோபின்,இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு உள்ளிட்ட பரிசோதனைகள் இலவசமாக செய்யப்பட்டன..

ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் நடைபெற்ற இதில் கோவையில் பல்வேறு இடங்களில் பணிபுரிந்து வரும் தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்…

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *