கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4000 வழங்க வேண்டும் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் வேலுசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாடு அரசு 2025-26ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையின் மாநில கோரிக்கையின் போது தமிழகத்தில் கரும்பு சாகுபடி செய்த விவசாயிகளின் நலன் கருதி கரும்பு டன் ஒன்றுக்கு 4000 வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டது

தற்போது வரை அந்த அரசாணையை வெளியிடவில்லை தற்போது இந்த ஆண்டுக்கு உண்டான கரும்பு அரவை பருவம் தொடங்கியுள்ள நிலையில் கரும்பை வெட்டி சர்க்கரை ஆலைக்கு அனுப்பிய விவசாயிகளுக்கு ஆலை நிர்வாகம் மூலம் பழைய கிரைய தொகையான கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.3,290.50 மட்டும் தான் வழங்கப்பட்டு வருகிறது

திமுக அரசு கரும்பு டன் ஒன்றுக்கு 4000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டு 8 மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை நான்காயிரம் ரூபாய் வழங்கப்படவில்லை தமிழகத்தில் உள்ள கரும்பு சாகுபடி செய்த விவசாயிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது இதனை கருத்தில் கொண்டு விவசாயிகளை வஞ்சித்து வரும் திமுக அரசை கண்டித்து வருகின்ற 10.01.2026 அன்று காலை 11 மணிக்கு நாமக்கல் மாவட்டம் மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பாக முதற்கட்டமாக உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

எனவே இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கரும்பு சப்ளை செய்த அனைத்து விவசாயிகளும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று தனது அறிக்கையின் வாயிலாக விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார் .

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *