மத்திய அரசு கொண்டுவந்துள்ள விதை சட்டத்தை கண்டித்தும், அதனை திரும்ப பெற வலியுறுத்தியும் கோவையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசின் விதை சட்டம் 2025–ஐ கண்டித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோவை மாவட்டக் குழு சார்பில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மாவட்ட தலைவர் சு. பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இதில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் பேசிய சு. பழனிசாமி,விதை சட்டம் 2025 விவசாயிகளின் விதை உரிமைகளை பன்னாட்டு மற்றும் உள்நாட்டு பெருநிறுவனங்களிடம் ஒப்படைக்கும் அபாயம் உள்ளது என்றும், விதை விலைகள் அதிகரித்து விவசாயிகள் பாதிக்கப்பட வாய்ப்பு அதிகம் என்றும் தெரிவித்தார்.மாநில அரசுகளின் அதிகாரங்களும் இதனால் குறைக்கப்படுகின்றன என்றார்.

மேலும், விவசாயிகளின் கருத்துகளைப் பெறாமல் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், அதனை உடனடியாக வாபஸ் பெறவேண்டும் என்றும், மின்சார திருத்தச் சட்டம் 2025-ஐயும் திரும்ப பெற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *