கரூர் செய்தியாளர் மரியான் பாபு
கரூர் பரணி பார்க் கல்விக் குழுமத்தில் மகாகவிக்கு மரியாதை
தாய்நாட்டின் விடுதலைக்குப் போராடிய தேசிய கவிஞரின் பிறந்த நாள் விழாவை இன்று கரூர் பரணி பார்க் கல்விக் குழுமத்தில் பாரதியார் பாடல்கள் பாடி உற்சாகத்துடன் கொண்டாடினர்.
இவ்விழாவில் பாரதியார் வேடமணிந்து நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.தேச விடுதலைக்கும் தமிழ் மொழி உயர்வுக்கும் மகாகவி பாரதியாரின் அளப்பரிய பங்களிப்பு குறித்த பரணி மாணவர்களின் எழுச்சி மிகுந்த உரை வீச்சு, பாரதியாரின் பல்வேறு பாடல்கள் பாடும் நிகழ்வு நடைபெற்றது. பங்கேற்ற அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
பாரதியார் பாடல்களை ஆசிரியர்களும், மாணவர்களும் இணைந்து உணர்வுபூர்வமாக பாடியதை அனைவரும் வெகுவாகப் பாராட்டினர்.பரணி பார்க் கல்விக் குழுமத் தாளாளர் சா.மோகனரெங்கன் தலைமை வகித்தார்.
செயலர் பத்மாவதி மோகனரங்கன், அறங்காவலர் சுபாஷினி அசோக்சங்கர், முதன்மை முதல்வர் முனைவர். சொ.ராமசுப்பிரமணியன், எம்.குமாரசாமி கல்வியியல் கல்லூரி முதல்வர் சாந்தி, பரணி வித்யாலயா முதல்வர் சுதாதேவி, பரணி பார்க் முதல்வர் சேகர், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.