திருவாரூர் கீழவீதியில் உள்ள பழமை வாய்ந்த துர்வாச மகரிஷி ஆலயம் என்று அழைக்கப்படும் அருள்மிகு பஞ்சின் மெல்லடியாள் சமேத தூவாயநாதர் ஆலயத்தில் உள்ள அருள்மிகு பால ஐயப்பனுக்கு இரவு ஐயப்பனின் ஜென்ம நட்சத்திரமான உத்திர நட்சத்திரத்தில் மஞ்சள், பால், தயிர், நெய்,பஞ்சாமிர்தம், இளநீர் சந்தனம் போன்ற அபிஷேகப் பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகமும் அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகாதீபாரதனை நடைபெற்றது.
இதில் திராண ஆன்மீகப் பெருமக்கள், பக்தகோடிகள் மற்றும் சபரிமலைக்கு மாலை அணிந்த ஐயப்ப பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பின் அனைவருக்கும் அன்னதானம் நடைபெற்றது.