தமிழக முதல்வர் அறிவுறுத்தலின் படி உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் தொகுதியில் வளர்ச்சி திட்டம் அடிப்படையில் எர்ணாவூர் சென்னை மாநகராட்சி பள்ளிக்கு 7.40 கோடி செலவில் இரண்டு தளத்தில், 15 வகுப்பறைகள் கட்டும் பணியை திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே பி சங்கர் பூமி பூஜை போட்டு அடிக்கல் நாட்டி கட்டிட பணிகளை துவக்கி வைத்தார்
இந்த நிகழ்ச்சியில் மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு, பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன், செயற் பொறியாளர் பாபு, உதவி பொறியாளர் கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.