கரூர் செய்தியாளர் மரியான் பாபு
கரூர் மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் தலைமையில் நடைபெற்றது பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது,பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு காணவும், அடிப்படைத் தேவைகளுக்கு முக்கியத்துவம் அளித்திடவும், பெண்களின் முன்னேற்றத்திற்கு தேவையான நடவடிக்கைகள் உள்ளிட்ட பணிகளில் அரசு அலுவலர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமெனவும், குறிப்பாக பொதுமக்கள் ஒருமுறை வழங்கிய மனுக்கள் மீண்டும் வராத வகையில் மனுவின் மீது உரிய தீர்வு வழங்கப்படுவதை அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, வங்கிக் கடன்கள், பட்டா மாறுதல், சாதிச்சான்று, வேலைவாய்ப்பு, கல்வி உதவித் தொகை, திருமண நிதியுதவி, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, உதவி உபகரணங்கள், குடிநீர் வசதி, சாலை வசதி உட்பட அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 440 மனுக்கள் வரப்பெற்றன.
மாற்றுத்திறனாளிகள் எவ்வித சிரமமும் இன்றி மனுக்களை வழங்கும் வகையில் மாவட்ட ஆட்சியரகத்தின் தரைதளத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கென நடத்தப்பட்டு வரும் குறைதீர் முகாமில் வீட்டுமனைப் பட்டா, உதவி உபகரணங்கள், பராமரிப்பு உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து அளிக்கப்பட்ட 36 மனுக்களைப் பெற்று, உரிய நடவடிக்கை மேற்கொள்ள தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் மீ. தங்கவேல் இ.ஆ.ப. தெரிவித்தார்.
இன்றைய தினம் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பாக 2பயனாளிகளுக்கு தலா ரூ. 11,445 மதிப்பீட்டிலான மூன்று சக்கர சைக்கிள்களையும், 1 பயனாளிக்கு ரூ.444 மதிப்பீட்டிலான மடக்கு குச்சியினையும், 1 பயனாளிக்கு ரூ.3,825 மதிப்பீட்டிலான காதொலி கருவியினையும் மற்றும் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் சார்பில் புதிய மின்னணு குடும்ப அட்டையினை 1 பயனாளிக்கும் என மொத்தம் 5 பயனாளிகளுக்கு ரூ.27,159 மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் மீ. தங்கவேல் இ.ஆ.ப. வழங்கினார்.
இக்கூட்டத்தில் குளித்தலை சார் ஆட்சியர் தி.சுவாதி ஶ்ரீ இ.ஆ.ப., மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வ.யுரேகா, உதவி இயக்குநர் ஊராட்சிகள் சரவணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) ஆர்.மனோகரன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மோகன்ராஜ் , மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் அலுவலர் சிவக்குமார், துணை ஆட்சியர் (பயிற்சி) கார்த்திகேயன் உள்ளிட்ட தொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.