தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
குண்டடம் அருகே சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்.
குண்டடம் அருகே நடைபெற்ற முதலமைச்சரின் சிறப்பு கால்நடை மருத்துவ முகாமில் 200க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது தும்பலப்பட்டி கால்நடை மருத்துவமனை சார்பில் நந்தவனம்பாளையத்தில் நடைபெற்ற இந்த முகாமில் பேட்டைக்காளிபாளையம் முதுநிலை கால்நடை டாக்டர் உமாசங்கர் தலைமையில் டாக்டர் கண்ணபிரான், ஆய்வாளர் மணிகண்டன் கால்நடை பராமறிப்பு உதவியாளர் சென்னிமலை ஆகியோர் கொண்ட டாக்டர் குழுவினர் சிகிச்சை அளித்தனர்.
இந்த முகாமில் 150 மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி, குடற்புழு நீக்கம், சினை ஊசி, சினை பரிசோதனை, மலடுநீக்கம் உள்ளிட்ட சிகிச்சைகள் வழங்கப்பட்டன. 30நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி போடப்பட்டது முகாமில் நந்தவனம்பாளையம் பகுதியைச் சேர்ந்த மாடுகள், ஆடுகள் நாய்கள் என 200க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை வழங்கப்பட்டது.