சென்னை திருவொற்றியூர் காலடிபேட்டை துணை மின் நிலையத்தில் உயர் மின் அழுத்தம் காரணமாக தீப்பற்றி எரிந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது..

சென்னை திருவொற்றியூர் காலடிபேட்டை பகுதியில் உள்ள துணை மின் நிலையத்தில் நள்ளிரவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது உயர் மின் அழுத்தம் காரணமாக மின் நிலையத்தில் உள்ள மின்சாதனங்களில் தீப்பற்றி எரிய தொடங்கியது.

தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதி முழுவதும் மின்சாரம் உடனடியாக நிறுத்தப்பட்டது தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவொற்றியூர் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை வீரர்கள் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலான போராட்டத்திற்குப் பிறகு தீ முழுமையாக அணைக்கப்பட்டது.இந்த சம்பவத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இருப்பினும் மின் நிலைய உபகரணங்கள் சேதமடைந்ததால் மின்விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டது.மின் வாரிய அதிகாரிகள் பழுது நீக்கும் பணிகளை உடனடியாக மேற்கொண்டுமின்விநியோகம் நள்ளிரவில் சீர் செய்யப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *