திண்டுக்கல் மாவட்டம்
பழனி அரசு மருத்துவமனையில் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனத்தின் மூலம் ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தொடர்ந்து ஒப்பந்த காலம் முடிவுற்ற நிலையில் அடுத்து வரும் நிறுவனம் மருத்துவமனையில் வேலை செய்யும் ஒப்பந்த தொழிலாளர்களை அப்படியே நியமனம் செய்து நிர்வகித்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த 25க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அரசு மருத்துவமனையில் வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது புதிதாக ஒப்பந்தம் எடுத்துள்ள ஸ்மித் என்ற தனியார் நிறுவனம் 10 ஆண்டுகளுக்கு மேலாக வேலை செய்து வந்த ஒப்பந்த தொழிலாளர்களை நீக்கிவிட்டு புதிய தொழிலாளர்களை நிர்வகிக்கும் வேளையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கொரோனா காலம் என்று கூட பார்க்காமல் தங்கள் உயிரை பணயம் வைத்து கொரோனா வார்டுக்குள் பல்வேறு மருத்துவ சேவைகள் செய்து வந்த தனியார் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு இதுவரை எந்த நிவாரணமும் வழங்கப்படவில்லை.
மேலும் அவர்களுக்கு உரித்தான வைப்புத் தொகை மருத்துவ காப்பீடு ஆகியவை முறையாக வழங்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
இதனை முதன்மை காரணமாக நிலைநிறுத்தி ஸ்மித் என்ற நிறுவனம் அனைவரின் வேலையை பரித்துள்ளது.
இந்நிலையில் 25 குடும்பங்கள் தற்போது வேலையில்லாமல் வறுமையில் வாடி வருகின்றனர். மேலும் இதில் கணவனை இழந்தோர் கணவனால் கைவிடப்பட்டோர் உள்ளிட்ட பல்வேறு நபர்களும் உள்ளனர். தொடர்ந்து இருபத்தைந்து குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து பரிதவித்து வரும் நிலையில் உடனடியாக ஸ்மித் நிறுவனம் அவர்களுக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி பாதிக்கப்பட்ட 25 தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியர் சரவணனிடம் ஆதார் கார்டு குடும்ப உறுப்பினர் கார்டு உள்ளிட்டவைகளை ஒப்படைக்கும் போராட்டதை தொடங்கினர்.
தொடர்ந்து பழனி நகரில் அரசு மருத்துவமனை பிரிவில் பல்வேறு மருத்துவ சேவைகள் செய்து வரும் தனியார் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு உடனடியாக வேலை வழங்கிட வேண்டும் அவர்கள் குடும்ப நலன் பாதுகாப்பை கருத்தில் கொண்டு எந்த நிபந்தனைகளும் வைக்காமல் அனைவருக்கும் மருத்துவமனையில் ஸ்மித் நிறுவனம் வேலை வழங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் வலியுறுத்தி வருகின்றனர்…