தாராபுரத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தெற்கு மாவட்ட விவசாய புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடைபெற்றது.
தாராபுரம்,
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நஞ்சியம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட குமரகுரு ஹோட்டலில் நேற்று (19.12.2025) மதியம் 12 மணி யளவில், திருப்பூர் தெற்கு மாவட்ட விவசாய அணி தலைவர் சிவபாலன் தலைமையில் நடைபெற்றது, இக்கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் ஜி.கே.நாகராஜ் வழிகாட்டிதலின்படி முன்னாள் மாநில பொருளாளர் பார்த்தசாரதி மற்றும் மாவட்ட பொதுச் செயலாளர் சுகுமார் முன்னிலை வகித்தார்கள்.
இதில் மாநில விவசாய அணி செயற்குழு உறுப்பினர் விவேகானந்தன்,மாநில செயலாளர் மௌன குருசாமி- மாவட்ட பொதுச் செயலாளர் உள்ளிட்ட பெரும் திரளான 200க்கும் மேற்பட்ட பாஜக விவசாய அணி புதிய மற்றும் பழைய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.