கோவை சுகுணா பாலிடெக்னிக் கல்லூரியில் முன்னால் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி
25 ஆண்டுகளுக்கு பிறகு பழைய நண்பர்கள் மற்றும் ஆசிரியர்களை சந்தித்து நினைவுகளை பகிர்ந்த சுகுணா பாலிடெக்னிக் மாணவர்கள் கோவை காளப்பட்டி சாலையில் உள்ள சுகுணா பாலிடெக்னிக் கல்லூரியில் கடந்த 1997 ஆம் ஆண்டு முதல் 2000 ஆம் ஆண்டு வரை பல்வேறு துறைகளில் பயின்ற முன்னால் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது…
25 ஆண்டுகளுக்குப் பிறகு, மாணவர்கள் மீண்டும் ஒன்று கூடி, தங்கள் பழைய நினைவுகளைப் பகிர்ந்தனர்.
விழாவில் அமெரிக்கா,ஆஸ்திரேலியா,மலேசியா,துபாய் போன்ற பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் மற்றும் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் முன்னாள் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்..
இதே போல ஆசிரியர்களாக பணிபுரிந்து வேறு இடங்களுக்கு சென்றவர்களும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் நீண்ட வருடங்களுக்கு பின்பு தங்களது ஆசிரியர்களை சந்தித்த மாணவர்கள் தங்களது நினைவுகளை பகிர்ந்த கொண்டதோடு,
தாங்கள் பயின்ற கல்வி நிறுவனத்தின் தாளாளர்கள் சுகுணா மற்றும் லட்சுமி நாராயணசாமி ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்று நினைவு பரிசை வழங்கி மகிழ்ந்தனர்..
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக முன்னாள் மாணவ, மாணவிகள் சார்பாக ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கி குழுவாக இணைந்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர் இதனைத் தொடர்ந்து மாணவர்கள் தாங்கள் படித்த பழைய வகுப்பறைகளை பார்வையிட்டு பழைய நினைவுகளை பகிர்ந்தனர்..
நிகழ்ச்சியில் சுகுணா பாலிடெக்னிக் டீன் ரம்யா சந்தோஷ்,முதல்வர் கோவிந்தராஜுலு,ஆசிரியர்கள்,
மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்..