கரூர் செய்தியாளர் மரியான் பாபு
கரூர் வெங்கமேடு பகுதியில் மாற்றுக் கட்சியிலிருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் 100 பேர் இணைந்த நிகழ்ச்சி தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
கரூர் வெங்கமேடு பகுதியில்,தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் கரூர் வடக்கு நகர கிழக்கு பகுதியைச் சேர்ந்த மாற்று கட்சியினர் 100 பேர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட செயலாளர் மதியழகன் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில், வடக்கு நகர கிழக்கு பகுதி நிர்வாகிகள் 100 க்கும் மேற்பட்டேர் தங்களை தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.இதனைத் தொடர்ந்து,கழக நிர்வாகிகள் தொண்டர்களுக்கு QRஸ்கேன் செய்து உறுப்பினர் அடையாளய அட்டையை மாவட்ட செயலாளர் மதியழகன் வழங்கினார். புதிதாக தங்களை கழகத்தில் இனைத்துக் கொண்டவர்களுக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் பொன்னாடை போர்த்தி வரவேற்றார்.
நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகளை வடக்கு நகர பகுதி செயலாளர் சதீஷ்குமார் செய்திருந்தார்.மேலும், இந்த நிகழ்வில் தமிழக வெற்றிக் கழக வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் வழக்கறிஞர் அரசு உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் கலந்து பலர் கொண்டு நிகழ்ச்சியைச் சிறப்பித்தனர்.