உதவி பேராசிரியர் தேர்வு 27-ம் தேதி: திருச்சியில் தேர்வு நடைமுறை அறிவிப்பு

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் உதவி பேராசிரியர்களுக்கான தேர்வு 27.12.2025 அன்று நடைபெறவுள்ளது மேற்கண்ட உதவி பேராசிரியர் போட்டித் தேர்வு பணியில் பணிபுரியும் அலுவலர்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வழங்கப்பட்ட கையேட்டின் படி இணைஇயக்குநர் அவர்கள் அறிவுரைகளை வழங்கினார்.

இத்தேர்வு பணியில் ஈடுபடும் அனைத்து ஆசிரியர்களும் காலை 07:30 மணிக்குள் தேர்வு மையத்திற்கு செல்லவேண்டும் 8:30 மணி முதல் தேர்வெழுதுபவர்களுக்கு Frisking செய்யப்படும் இப்பணியில் ஆண் காவலர் மற்றும் பெண் காவலர்களுடன் உடற்கல்வி ஆசிரியர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

தேர்வு மையத்தில் காலை 09:00 மணிக்கு நுழைவாயில் பூட்டப்படும். 9:00 மணிக்கு மேல் வரும் தேர்வர்வர்களை அனுமதிக்க முடியாது. 09:30 மணி முதல் 12:30 மணி வரை தேர்வுகள் நடைபெறும். மாற்று திறனாளிகளுக்கு 1:00 மணி வரை தேர்வு நடைபெறும்.

இதில் 10 தேர்வு மையங்களில் 2624 தேர்வர்கள் 43 (Objective Type) தேர்வு எழுதவுள்ளனர். 20 தேர்வர்கள் சொல்வதை எழுதுபவர்கள் (Scribe) உதவியுடன் தேர்வு எழுதவுள்ளனர். 76 தேர்வர்கள் மாற்றுத்திறனாளிகள் ஆவர்கள்

பிற்பகல்தேர்வு தேர்வு எழுதுபவர்களுக்கு 02:00 மணிக்கு Frisking செய்யப்படும் ஆண் காவலர் மற்றும் பெண் காவலர்களுடன் உடற்கல்வி ஆசிரியர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். தேர்வுமையம் 02.30 மணிக்கு நுழை வாயில் பூட்டப்படும். 2.30 மணிக்கு மேல் வருபவர்களுக்கு தேர்வு எழுத அனுமதிக்க முடியாது 03.00 மணி முதல் 04.00 மணி வரை (Descriptive Type) தேர்வுகள் நடைபெறும். மாற்றுதிறன் தேர்வர்களுக்கு 20 நிமிடம் கூடுதலாக நேரம் வழங்கப்படும்.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தேர்வு எழுதவுள்ள அனைத்து தேர்வர்களும் ஆசிரியர் தேர்வு வாரியத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட புகைப்படத்துடன் கூடிய நுழைவு சீட்டுடன் (HALL TICKET) ஆளறிச்சான்றான ஆதார்அட்டை (AADAR), PAN Card, கடவுசீட்டு (PASS PORT) மற்றும் ஓட்டுநர் உரிமம் (Driving Lessons) ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று அசல் சான்று (Original) எடுத்துவருபவர்கள் மட்டுமே கட்டாயம் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன், அவர்கள் தெரிவித்துள்ளார்.

திருச்சி செய்தியாளர் அருள் மோகன்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *