பெரம்பலூர்.டிச.25 திருச்சி – சென்னை நெடுஞ்சாலையில் திருச்சியில் இருந்து சென்னை நோக்கி அரசு விரைவில் பேருந்து சென்று கொண்டிருந்தது இந்த பேருந்து கடலூர் மாவட்டம், எழுத்தூர் பேருந்து நிறுத்தம் அருகே நேற்று முன்தினம் இரவு 7.30 மணியளவில் எதிர்பாராத விதமாக பேருந்தின் முன் பக்க டயர் வெடித்தது இதனால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையின் நடுவே இருந்த தடுப்பு கட்டையை தாண்டி சென்று, சென்னையிலிருந்து திருச்சி நோக்கி வந்த இரண்டு கார்கள் மீது மோதியது இந்த விபத்தில் கார்களில் வந்த கார் ஓட்டுநர் மற்றும் சிறுவன் உட்பட 07 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் ஆறு நபர்கள் பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த 02 நபர்கள் உயிரிழந்தனர். மீதமுள்ள 04 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி உடனடியாக பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்குச்சென்று காயமடைந்தவர்களுக்கு ஆறுதல்கூறினார்.
இதுகுறித்த தகவலறிந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கிய உத்தரவின்படி, போக்குவரத்துத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன் ஆகியோர் சென்னையில் இருந்து அதிகாலை 3 மணிக்கு பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு வருகை தந்து காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறினார்கள்.

இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கச்செய்து பணிகளை துரிதப்படுத்தினர்.

அதனைத் தொடர்ந்து, (25.12.2025) காலை போக்குவரத்துத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் , மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா, பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் ஆகியோர் பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு வந்து, பிரேதப்பரிசோதனைக்குப் பின் இறந்தவர்களின் உடல்களை திருச்சி, புதுக்கோட்டை மற்றும் கரூர் என அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *