தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

புத்தாண்டு வரவேற்பு உற்சாகம்: தாராபுரம் பெரிய கடை வீதியில் கேக் விற்பனை அமோகம்..

விஜய், அஜித், ஸ்டாலின் உருவ கேக்குகளுக்கு மவுசு – நள்ளிரவு வரை மக்கள் குவிப்பு…

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில், 2026 ஆம் ஆண்டு புத்தாண்டு வரவேற்பை முன்னிட்டு, நகரின் முக்கிய வர்த்தக பகுதிகளான பெரிய கடை வீதி, பொள்ளாச்சி சாலை பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தனியார் பேக்கரிகள், ஸ்வீட் கடைகள் மற்றும் ஹோட்டல்களில் கேக் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது

புத்தாண்டை கொண்டாடும் வகையில், கிறிஸ்மஸ் தாத்தா வடிவம் மட்டுமின்றி, நடிகர்கள் விஜய், அஜித், அரசியல் தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களின் உருவங்கள் பதிக்கப்பட்ட சிறப்பு கேக்குகள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இக்கேக்குகளை வாங்க பொதுமக்கள் ஆர்வமுடன் கடைகளில் குவிந்து வருகின்றனர்.

மேலும், குழந்தைகள் மற்றும் இளைஞர்களை கவரும் வகையில், வண்ண வண்ண அலங்காரங்களுடன் கூடிய கேக்குகள் தயாரிக்கப்பட்டுள்ளன. ஆரஞ்சு, திராட்சை, சாக்லேட், மில்க், பட்டர் ஸ்காட்ச், ஒயிட் ஃபாரஸ்ட் உள்ளிட்ட பல்வேறு சுவைகளில் கேக்குகள் கிடைப்பதால் வாடிக்கையாளர்கள் விருப்பமான கேக்குகளை தேர்வு செய்து வாங்கி செல்கின்றனர்.

இரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறக்க உள்ளதால், கடைகளில் நள்ளிரவு வரை விற்பனை நடைபெறுகிறது. குடும்பத்துடன் கொண்டாடும் மக்கள், நண்பர்கள், இளைஞர்கள் என பல்வேறு தரப்பினரும் போட்டி போட்டுக் கொண்டு கேக்குகளை முன்பதிவு செய்தும் நேரடியாக வாங்கியும் வருகின்றனர். இதனால், பேக்கரி கடைகளில் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

புத்தாண்டை இனிமையாக தொடங்க வேண்டும் என்ற எண்ணத்தில், கேக், ஸ்வீட், குளிர்பானங்கள் உள்ளிட்ட பொருட்களின் விற்பனை கடந்த ஆண்டுகளை விட அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். புத்தாண்டு கொண்டாட்டத்தால் தாராபுரம் நகரம் முழுவதும் உற்சாக சூழல் நிலவுகிறது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *