தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டாரத்திற்குட்பட்ட மேல்மங்கலம் ஊராட்சியில், ஊராட்சி செயலாளர் ஆர். முருகன் முன்னிலையில், உசிலம்பட்டி கிருஷ்ணா வேளாண் தொழில்நுட்பக் கல்லூரியில் பயிலும் இளங்கலை மாணவர்கள் மு. கார்த்திகேயன், சேவுகமூர்த்தி, அருண்மொழி, மாதவகிருஷ்ணன், திலக், பிரவீன் மற்றும் அன்புமணி ஆகியோர் இணைந்து, Participatory Rural Appraisal (PRA) முறையின் கீழ், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களுக்காக ஊரக அமைப்பு மற்றும் வேளாண்மை சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர்.

இந்நிகழ்ச்சியின் போது, வழக்கமான வரைபடம், வென் வரைபடம், ஊரக வளங்கள் வரைபடம், இயக்கம் வரைபடம் உள்ளிட்ட பல்வேறு PRA கருவிகள் பயன்படுத்தப்பட்டு, விவசாயம் மற்றும் ஊரக வளர்ச்சி தொடர்பான தகவல்கள் பொதுமக்களிடையே தெளிவாக எடுத்துரைக்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்று பயனடைந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *