தேவாரம் அருகே பண்ணைப் புரம் பேரூராட்சியில் சிறுவர் பூங்கா உணவு கூடத்தை திறந்து வைத்த எம்எல்ஏ தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள பண்ணைப் புரம் பேரூராட்சியில் உள்ள சமுதாய கூடத்தில் உணவு கூடம் குழந்தைகள் பூங்கா ஆகியவற்றை தேனி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் என் இராமகிருஷ்ணன் திறந்து வைத்தார்

பண்ணைப்புரம் பேரூராட்சி பகுதியில் உள்ள 11 ஆவது வார்டு கரியணம்பட்டியில் ரூபாய் 10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சிறுவர்கள் விளையாடும் பூங்கா வார்டு 8 ல் உள்ள சமுதாயக் கூடத்தில் உணவுக் கூடம் ஆகியவை புதியதாக கட்டப்பட்டு இருந்தது இதனை கம்பம் சட்டமன்ற உறுப்பினர் என் ராமகிருஷ்ணன் பொதுமக்கள் பயன்பாட்டிற்க்கு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்

இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் சா. இளங்கோவன் பேரூராட்சி மன்ற தலைவர் இலட்சுமி இளங்கோ உத்தமபாளையம் மேற்கு ஒன்றிய செயலாளர் குமரன் பண்ணைப்புரம் பேரூர் திமுக செயலாளர் இளங்கோ பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் சுருளி வேல் மற்றும் பேரூராட்சி மன்ற கவுன்சிலர்கள் பலர் கலந்து கொண்டனர் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பேரூராட்சி இளநிலை உதவியாளர் முருகன் மற்றும் அலுவலக பணியாளர்கள் வெகு சிறப்பாக செய்திருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *