வால்பாறை அரசு மருத்துவமனையில் ஆய்வு மற்றும் ஆலோசனைக் கூட்டம் சார் ஆட்சியர் இராமகிருஷ்ணசாமி தலைமையில் நடைபெற்றது
கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள அரசு மருத்துவமனையில் பொள்ளாச்சி சார் ஆட்சியர் இராமகிருஷ்ணசாமி தலைமையில் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் குட்டி என்ற ஆ.சுதாகர், மருத்துவர் முருகபூபதி,அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் மது பிரீத்தா ஆகியோர் முன்னிலையில் மருத்துவமனையை ஆய்வு மேற்க் கொள்ளப்பட்டது அதைத் தொடர்ந்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
இக்கூட்டத்தில் பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உள்ளிட்ட பணியாளர்கள், மருத்துவமனையின் செயல்பாடுகள், நோயாளிகளின் வருகை குறித்தும் சார் ஆட்சியர் கேட்டறிந்தார்
பின்னர் மருத்துவமனையின் குறைபாடுகள் தேவையான நடவடிக்கைகள் பற்றியும் பொதுமக்களின் கோரிக்கைகளையும் கேட்டு அதற்கான நடவடிக்கையை மாவட்ட ஆட்சி தலைவரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார் இந்நிகழ்வின் போது வால்பாறை காவல் ஆய்வாளர் செல்வம், வட்டாட்சியர் அருள் முருகன், நகர்மன்ற தலைவர் அழகு சுந்தரவல்லி, சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் பாபு லட்சுமணன், அரசு மருத்துவமனை மருத்துவர் ராஜசேகரன், நகர் மன்ற துணைத்தலைவர் செந்தில் குமார், விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் ஜே. பாஸ்கர், தவெக நகரச்செயலாளர் ஆண்ட்ரூஸ், சிஐடியு பரமசிவம், மருத்துவர்கள் செவிலியர்கள், மருத்துவமனை பணியாளர்களும் பல்வேறு அமைப்புக்களைக் சேர்ந்த நிர்வாகிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்
வால்பாறை செய்தியாளர் ரவிச்சந்திரன்