நீட் தேர்வில் ஏற்பட்ட முறைகேடுகளை கண்டித்து அறவழிப் போராட்டம் நடத்திய சமூக ஆர்வலர் சோனம் வாங்சுவை அராஜகமான முறையில் அப்புறப்படுத்திய காவல்துறையை கண்டித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களையும் பலவந்தமாக, அராஜகமான முறையில் காவல்துறையினர் அடிதடியில் ஈடுபட்டு அப்புறப்படுத்தினர்.
காவல்துறையினரின் அடிதடியால் பல மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டது. இதனை கண்டித்து நாடு முழுவதும் மாணவர்கள் பெருமளவில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திருவாரூர் திருவிக அரசு கலைக் கல்லூரியில் படிக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும், ஒன்றிய கல்வித் துறை அமைச்சர் பதவி விலக வலியுறுத்தியும், உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை அராஜகமான முறையில் அடிதடியில் ஈடுபட்டு கைது செய்த காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
டெல்லியில் மாணவர்கள் மீது நடைபெற்ற தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து திருவாரூர் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டது மாணவர்கள் எழுச்சியை காட்டுகிறது