கும்பகோணம் அருகே அன்னை கல்லூரியில் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் மாநில அளவில் இளந்தமிழர் இலக்கியப் பயிற்சிப் பட்டறை நடைபெற்றது.

விழாவில் தமிழ் வளர்ச்சித் துறையின் இயக்குநர் முனைவர்.ஒளவை ந.அருள் கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினார். அப்போது அவர்
பேசியதாவது:-

தமிழ் இலக்கியம் படித்து இந்திய ஆட்சி பணியாளர்கள் மற்றும் குடிமைப் பணியாளர்கள் வெற்றி பெற்று வருகின்றனர்.தற்போது பேசுபவர்கள், எழுதுபவர்கள் அதிகமாக உள்ளனர். அவர்களின் படைப்பாற்றல் அபரிதமாக உள்ளது. இதற்கு காரணம் தமிழக வளர்ச்சி துறையை தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட ஆங்கில கவிதை, கிரேக்க, லத்தீன் நூல்கள், ஷேக்பியர் எழுதிய வசனங்களை தற்போது மனப்பாடமாக சொல்ல முடியவில்லை, ஆனால் 1330 குறட்பாக்களை திருக்குறளை
ஒப்பிட்டு பேசும் திறமை நம் மாணவர்களுக்கு உண்டு..

செயற்கை நுண்ணறிவு திறன்களால் உடனுக்கு உடன் உரையாடல் பெற்று கணினி பயன்பாட்டிலும் தமிழ் சிறந்து விளங்குகிறது.உலக அளவில் தமிழ் வளர்ச்சி பெற்று சிறந்து அளவில் அனைவரிடம் சென்று வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

முகாமில் கவிஞர்கள், எழுத்தாளர்கள் கட்டுரை ஆசிரியர்கள்,மொழிபெயர்ப்பாளர்கள், பட்டிமன்ற பேச்சாளர்கள், அறிவியல் அறிஞர்கள், தமிழ் அறிஞர்கள், மனிதவள மேம்பாட்டுப் பயிற்சியாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள், ஆராய்ச்சியாளர்கள் எனப் பன்முக ஆளுமைகள் என 7 நாட்கள் முகாம் நடைப்பெறுகிறது.

முகாமில் கவிஞர்கள் மானா பாஸ்கரன்,சக்தி ஜோதி, புதுகை பாரதி, பேராசிரியர் ருக்மணி,பாரதி, தெய்வானை, மற்றும் 38 மாவட்ட கல்லூரி மாணவர்கள், அறிஞர்கள், பெற்றோர்கள் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *