திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன்பேட்டை மகா மாரியம்மன் ஆலயத்தில் தமிழக வெற்றி கழகம் தலைவரும், திரைப்பட நடிகருமான விஜய் நடித்த “ஜனநாயகம்” திரைப்படம் வெற்றி பெற வேண்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
நிகழ்வில் வலங்கைமான் கிழக்கு ஒன்றிய தவெக செயலாளர் ஆர்.எஸ்.விஜய், வடக்கு ஒன்றிய செயலாளர் கவியரசன், மேற்கு ஒன்றிய செயலாளர் நெப்போலியன், பேரூர் செயலாளர் மனோஜ் குமார் ஆகியோர் தலைமையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று, ஆலயத்திற்கு முன்புறம் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்வில் தமிழக வெற்றி கழகம் நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.