கண்டமங்கலம், ஜன-07

கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட வி நெற்குணம் பகுதியில் செல்லும் சங்கராபரணி ஆற்றின் குறுக்கே வழுதாவூர் மற்றும் நெற்குணம் ஆகிய கிராமங்களுக்கு இடையே சங்கராபரணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கு 30 கோடி நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பணி துவங்கப்பட்டது. பணி துவங்கப்பட்ட இடத்தில் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் தடுப்பனையில் கட்டுமான பணிகள் குறித்து நீர்வளத்துறை செயற்பொறியாளர் அருணகிரி உதவி செயற்பொறியாளர் ஐயப்பன் ஆகியோரிடம் விளக்கமாக கேட்டறிந்தார். மேலும் அதற்கான வரைபடங்களை பார்வையிட்டார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *