பொங்கல் பரிசு தொகுப்புக்கு விவசாயிகளிடமிருந்து கரும்பு கொள்முதல் செய்த மாவட்ட கலெக்டர் தேனி மாவட்டம் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பில் வழங்கப்படவுள்ள முழுக்கரும்புகளை தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள கோட்டூர் பகுதிகளில் உள்ள விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யும் பணிகளை மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். நாளை மறுநாள் 8 ஆம் தேதி வியாழக்கிழமை பொங்கல் பரிசுத் தொகுப்பு ரேஷன் அட்டை தாரர்களுக்கு வழங்கப்பட உள்ளது. இதனையொட்டி கரும்பு கொள்முதல் செய்யும் பணியும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.