திருவாரூர் ஜூலை 22,
ஆகஸ்ட் 1ல் எல் நினோ தாக்குதல் வறட்சி சிறப்பு மாநாடு

மேகதாட்டிற்கு நடுவர் மன்றம் கோரும் திமுக விற்கு எதிராக போராட்டத்தை தீவிரப் படுத்துவோம்
பிஆர்.பாண்டியன் அறிவிப்பு

தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநில மாவட்ட ஒன்றிய
நிர்வாகிகளின் அவசர ஆலோசனைக் கூட்டம் திருவாரூரில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு தஞ்சை மண்டல தலைவர் வேட்டங்குடி சீனிவாசன் தலைமையேற்றார் பொதுச்செயலாளர்
பி ஆர் பாண்டியன் பங்கேற்று பேசிய பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
காவிரி டெல்டாவில் குறுவை சாகுபடி முற்றிலும் இழந்துள்ளோம். எல்நினோ தாக்குதலால் கேரளா கர்நாடக மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை குறைந்ததால் ஒட்டுமொத்தமாக மிகப்பெரும் வறட்சி தீவிரம் அடைந்து இருக்கிறது.

குறிப்பாக காவிரி டெல்டாவில் மேட்டூர் அணை75 அடிக்கு குறைவாக உள்ளது.இதனால் பாசனத்திற்கு அணை திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சுமார் 12 லட்சம் ஏக்கர் பாலைவனமாக காட்சியளிக்கிறது

சம்பா சாகுபடியும் மேற்கொள்ள முடியுமா? என்கிற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் எல்நினோ தாக்குதலால் மிகப்பெரும் வறட்சி ஏற்பட்டு விவசாயிகள் பரிதவிக்கின்றன ர்.

இத் தாக்குதலில் இருந்து வேளாண்மை விவசாயிகள் உணவு பாதுகாப்பு குறித்து விஞ்ஞானிகள் கலந்து கொள்ளும் வறட்சி சிறப்பு மாநாடு திருவாரூரில் ஆகஸ்ட் 1ஆம் தேதி நடத்த உள்ளோம். ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்க உள்ளனர்.

இம்மாநாட்டில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன்,வேளாண் துறை அமைச்சர் வினோத்விஜய் ஆகியோர் பங்கேற்று மாநாட்டை துவக்கி வைக்க உள்ளனர்.

இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பில் காலநிலை மாற்றத்திற்கான முதன்மை விஞ்ஞானி ரவிசங்கர்,ஐஐடி இயக்குனர் காமகோடி, வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் பொறுப்பு சுப்பிரமணியன், புயல் எச்சரிக்கை முன்னால் இயக்குனர் ரமணன், முன்னாள் துணைவேந்தர் கே ராமசாமி,கால்நடை ஆராய்ச்சியாளர் புண்ணியமூர்த்திஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலைய இயக்குனர் தமிழ்வேந்தன் உள்ளிட்ட பல்வேறு விஞ்ஞானிகள் பங்கேற்க உள்ளனர்.

மேகதாட்டு அணைக்கு எதிராக திமுக பாராளுமன்ற மாநிலங்களவையிலும் மக்களவையிலும் ஒத்திவைப்பு தீர்மானம் கொடுத்துள்ளது வரவேற்கிறோம். ஆனால் தொடர்ந்து மேகதாட்டுக்கு நடுமன்றம் கோருவது பெற்ற உரிமையை பறி கொடுப்பதற்கு சமமாகும். ஏற்கனவே விபி சிங் பிரதமராகஇருந்தபோது எந்த மாநிலத்திற்கும் சம்பந்தமில்லாமல் நடுநிலையோடு உச்ச நீதிமன்றத்திற்கு இணையான அதிகாரம் கொண்ட அமைப்பாக காவிரி நடுவர் மன்றம் அமைத்துக் கொடுத்தார். அதனுடைய இறுதி தீர்ப்பு தான் இன்றைக்கு கர்நாடகம் எந்த ஒரு அணையும் கட்ட முடியாது என்பதை உறுதிப்படுத்தி வருகிறது.

இந்நிலையில் தற்போதைய அரசியல் சூழலில் மேகதாட்டிற்கு நடுவர் மன்றம் கோருவது கர்நாடகாவில் ஆட்சி அதிகாரத்திற்கு வர துடிக்கும் பாஜக காங்கிரசுக்கு இடையே போட்டியை தன தாக்கி கொள்வதற்காக நடுவர் மன்றத்தை அமைத்து கர்நாடகாவுக்கு சாதகமாக அணைக்கட்ட தீர்ப்பளித்தால் யார் ?பொறுப்பேற்பது என திமுக விளக்கம் அளிக்க வேண்டும்.

திமுக உள்நோக்கத்தோடு நடுவர் மன்றம் கோருவது பெற்ற உரிமையை பறிகொடுப்பதற்கு சமமாகும். மீண்டும் மீண்டும் நடுவர் மன்றம் திமுக கோருமேயானால் காவிரி டெல்டாவில் திமுக கட்சிக்கு எதிரான போராட்டத்தை தீவிர படுத்த வேண்டிய தேவை ஏற்படும் என்பதை எச்சரிக்கிறேன் என்றார்.

மாநில அமைப்பு செயலாளர் ஸ்ரீதர் திருவாரூர் மாவட்ட தலைவர் எம். சுப்பையன்
நாகப்பட்டினம் மாவட்ட தலைவர் பாலசுப்ரமணியன் மயிலாடுதுறை மாவட்ட தலைவர் முருகன், தஞ்சாவூர் தெற்கு மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் செயலாளர் பிரபாகரன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
நிறைவாக மாநாட்டிற்கு வரவேற்பு குழு அமைக்கப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *