நன்னிலம் தொகுதிக்கு உட்பட்ட வலங்கைமான் அருகே உள்ள Z -795 பட்டம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் கீழ் களத்தூர் பகுதியில் பொது விநியோக நியாய விலை கடை செயல்பட்டு வருகிறது. அதற்கான புதிய கட்டிடம் வேண்டும் என அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

அதன் பேரில் எம் எல் ஏ காமராஜ் தனது சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.12.50 லட்சம் ஒதுக்கீடு செய்து வழங்கினார். நிதி ஒதுக்கீடுபடி புதிய பொது விநியோக நியாய விலை கடை கட்டிடம் கட்டப்பட்டது.

புதிய கட்டிடத்தை எம் எல் ஏ ஆர்.காமராஜ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்து பேசுகையில், நன்னிலம் பகுதியில் ஏராளமான கட்டமைப்புகளை உருவாக்கி கொடுத்துள்ளோம். பாலங்கள் கட்டிக் கொடுத்துள்ளோம். கல்லூரிகளை வழங்கியுள்ளோம். பள்ளிகளை தரம் உயர்த்தி உள்ளோம். சாலை வசதி செய்து கொடுத்துள்ளோம்.

மேலும் உங்களின் தேவைகளை நிறைவேற்றி கொடுத்துள்ளோம். இந்த தகுதிகளோடு தான் உங்கள் முன் நின்று கொண்டிருக்கிறேன் என்றார். நிகழ்ச்சியில் வலங்கைமான் ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் குமாரமங்கலம் கே. சங்கர், கிழக்கு ஒன்றிய செயலாளர் யூ.இளவரசன், வலங்கைமான் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) முரளி, பொது விநியோக திட்ட கூட்டுறவு சார்பதிவாளர் கூட்டுறவு சங்க செயலாளர் கோவிந்தராஜன் மற்றும் பணியாளர்கள், அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும் பயனாளிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *