குத்தாலத்தில் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 388 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி:- மயிலாடுதுறை எம்எல்ஏ ராஜகுமார் வழங்கினார்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் குத்தாலம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 191 மாணவர்களுக்கும், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 197 மாணவிகளுக்கு ம் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.

அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் லதா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மயிலாடுதுறை எம்எல்ஏ ராஜகுமார் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று மாணவ மாணவிகளுக்கு, விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி பேசினார்.

இதில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். ‌

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *