தேனி மாவட்டம் தேனி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி ஓட்டுனர் உரிமம் பழகுனர் உரிமம் பெறுவதற்கும் உரிமம் புதுப்பிக்கவும் வந்த பொது மக்களுக்கு விபத்து தடுப்பு மற்றும் முதலுதவி அளிப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
இந்த நிகழ்ச்சிக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பி. மாணிக்கம் தலைமை வகித்தார் மோட்டார் வாகன ஆய்வாளர் ஆர் .மணிவண்ணன் முன்னிலை வகித்தார்.இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் பாதுகாப்பாக வாகனம் ஓட்டுவது போக்குவரத்து விதிகளை கடைப்பிடிப்பது மற்றும் விதி மீறல்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் பொது மக்களுக்கு புரியுமாறு விளக்கம் அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் பணியாளர் சுகுமார் தலைமையில் ஆம்புலன்ஸ் மீட்பு பணி மற்றும் முதலுதவி அளித்தல் குறித்த செயல் விளக்கம் காண்பிக்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் டிரைவர்கள் வாகன ஓட்டுனர்கள் விற்பனை முகவர்கள் ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்