காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் தொழிற்சாலைக்கு, தமிழ்நாடு அரசின் தொழில்துறை பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குனரகத்தின் தமிழ்நாடு மாநில அளவிலான பாதுகாப்பு விருது வழங்கப்பட்டுள்ளது.

மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. C.V. கணேசன் அவர்கள், தொழில்துறை பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர் திரு. ஆனந்த் அவர்களுடன் இணைந்து, இந்த மதிப்புமிக்க விருதை HMIL நிறுவனத்தின் உற்பத்திப் பிரிவு துணைத் தலைவர் திரு. முகுந்தன் M.S. மற்றும் பாதுகாப்பு மற்றும் நலவாழ்வுத் துறை இணை துணைத் தலைவர் திரு. செந்தில்குமார் R.M. ஆகியோரிடம்  வழங்கினார். இந்த அங்கீகாரம் 2022 ஆம் ஆண்டிற்கானது.

இது, பெரிய அளவிலான தொழில்துறை (பிரிவு A) பிரிவில் பாதுகாப்பில் சிறந்து விளங்குவதற்கான ஹூண்டாயின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பைப் எடுத்துக்காட்டுவதுடன், குறிப்பிடத்தக்க அளவிலான சம்பவ நிகழ்வு குறைப்பு மற்றும் இடர் மேலாண்மை மற்றும் பணியிடப் பாதுகாப்பில் ஒரு நேர்த்தியான அணுகுமுறை ஆகியவற்றையும்  பிரதிபலிக்கிறது.

இந்தியாவில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலான செயல்பாடுகளில், ஸ்ரீபெரும்புதூர் ஆலை, விரிவான பாதுகாப்புப் பிரச்சாரங்கள், உன்னிப்பான கண்காணிப்பு அமைப்புகள் மற்றும் தொடர்ச்சியான மேம்பாட்டுத் திட்டங்களைச் செயல்படுத்தி, பணியிடம் முழுவதிலும் மிக உயர்ந்த பாதுகாப்புத் தரங்களைப் பராமரிக்கும் ஒரு கலாச்சாரத்தை வலுப்படுத்தியுள்ளது.

   இந்தச் சாதனை குறித்துப் பேசிய ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் முழுநேர இயக்குநர் மற்றும் தலைமை உற்பத்தி அதிகாரி திரு. C.S. கோபாலகிருஷ்ணன், “ஹூண்டாயில் பாதுகாப்பு என்பது ஒரு தனிப்பட்ட முயற்சி அல்ல—அது எங்கள் செயல்பாடுகளின் ஒவ்வொரு மட்டத்திலும் பின்பற்றப்படும் உள்ளார்ந்த ஒரு கலாச்சாரம். எங்கள் இலக்கு எளிமையானது: ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு ஊழியருக்கும், பாதுகாப்பான ஒரு பணிச்சூழலை வழங்குவதுதான். இந்த விருது எங்கள் குழுக்களின் கூட்டு அர்ப்பணிப்பை உறுதிப்படுத்துவதுடன் எங்கள் பாதுகாப்புத் திறனை மேலும் வலுப்படுத்த எங்களை ஊக்குவிக்கிறது,” என்றார்.

   ஹூண்டாய் மோட்டார் இந்தியா தனது பாதுகாப்பு அமைப்புகளை தொடர்ந்து மேம்படுத்துவதற்கும், ஊழியர்களின் நலனுக்கு முன்னுரிமை கொடுக்கும் ஒரு பணியிடக் கலாச்சாரத்தை வளர்ப்பதற்கும் உறுதிபூண்டுள்ளது. போட்டி நிறைந்த சந்தைச் சூழலில் நமது செயல்பாடு, நிறுவனத்தின் வலுவான பாதுகாப்பு நிர்வாகம், துல்லியமான நடைமுறைகள் மற்றும் உலகளாவிய பாதுகாப்புத் தரநிலையிலான தொடர் பயிற்சி ஆகியவற்றைப் பிரதிபலிக்கிறது. நிறுவனம் துவங்கியது முதலே ஊக்கமிகு இடர் மதிப்பீடுகள், சிறந்த நடைமுறைகள் மற்றும் தொடர்  பாதுகாப்புப் பிரச்சாரங்கள் மூலம், ஹூண்டாய் தனது செயல்பாடுகளில் சிறந்த பாதுகாப்புக் கலாச்சாரத்தை தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *