கோவை மாவட்டம் வால்பாறையில் திமுகவின் வால்பாறை நகரக்கழகத்தின் சார்பாக திராவிட பொங்கல் விழா, விளையாட்டு போட்டிகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மேற்கு மண்டல பொறுப்பாளர் வி. செந்தில் பாலாஜி அறிவுறுத்தலின் படி பொள்ளாச்சி பாரளுமன்ற உறுப்பினர் ஈஸ்வர சாமி ஆலோசனைக்கு இணங்க வால்பாறை நகரச்செயலாளர் குட்டி என்ற ஆ.சுதாகர் தலைமையில் வால்பாறையிலுள்ள நகராட்சி கால்பந்து மைதானத்தில் நடைபெற்றது

இவ்விழாவில் திமுகவின் கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் வருகைதந்து திராவிட மாடல் பொங்கல் விழா, கோலப்போட்டி ஆகியவற்றை பார்வையிட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசும் மற்றும் நலத்திட்ட உதவிகளையும் வழங்கி சிறப்பித்தார்

வெகுசிறப்பாக நடைபெற்ற இந்த திராவிட மாடல் பொங்கல் திருவிழாவில் மாநில, மாவட்ட, நகர, வார்டு கழக செயலாளர்கள், அணி நிர்வாகிகள், நகர் மன்ற உறுப்பினர்கள், வார்டு கழக உறுப்பினர்கள், நகர பூத் முகவர்கள் உள்ளிட்ட அனைவரும் திரளாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

வால்பாறை செய்தியாளர் ரவிச்சந்திரன்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *