சின்னமனூரில் சமத்துவ பொங்கல் விழா விளையாட்டு போட்டி
தேனி மாவட்டம் சின்னமனூரில் சமத்துவ பொங்கல் விழா வெல்லட்டும் தமிழ்நாடு என்ற தலைப்பில் விளையாட்டுப் போட்டிகள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவின் பெயரில் தேனி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் பண்பாளர் கம்பம் என் இராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ. ஆலோசனைப்படி சின்னமனூர் நகர செயலாளர் ந. முத்துக்குமார் தலைமையில் நகராட்சி நகர்மன்ற தலைவர் இரா. அய்யம்மாள் ராமு தேனி தெற்கு மாவட்ட திமுக பிரமுகர் பஞ்சாப்.இரா. முத்துக்குமரன் ஆகியோர் முன்னிலையில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
இந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு கோப்பை வழங்கி ஊக்குவிக்கப்பட்டதுஇந்த நிகழ்ச்சியில் விளையாட்டு வீரர்கள் வீராங்கனைகள் மாவட்ட நகர ஒன்றிய பேரூர் மற்றும் ஊரக திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.