போடி அருகே மோடி பொங்கல் விழா கொண்டாட்டம்
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே கிழக்கு பாஜக ஒன்றியம் சார்பில் கூளையனூரில் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்டத் தலைவர் பி ராஜபாண்டியன் தலைமையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
இதன்படி இங்குள்ள பிரசித்தி பெற்ற கூளையனூர் கோவில் வளாகத்தில் வண்ணக் கோலங்கள் இட்டு புது பானையில் பொங்கலிட்டு பொங்கல் பொங்கி வரும் வேளையில் பொங்கலோ பொங்கல் என்று கோஷமிட்டு மகிழ்ந்தனர்
இந்த மோடி பொங்கல் விழாவில் தமிழர்களின் பாரம்பரிய உடையான ஆண்கள் வேஷ்டி சட்டை அணிந்தும் பெண்கள் சேலை தாவணிகள் அணிந்தும் விழாவை சிறப்பித்தனர் நிகழ்ச்சியில் பாஜக மாவட்ட நகர ஒன்றிய பேரூர் மற்றும் ஊரக பாஜக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்