எ.பி.பிரபாகரன் பெரம்பலூர்
செய்தியாளர்

பெரம்பலூர்.ஜன.15. பெரம்பலூர் சங்குபேட்டையில் உள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருகோயில் தை மாதத்தில் முதல் நாளை யொட்டி 19வது வார்டு சங்குபேட்டையில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் திருகோயில் இத்திருகோயிலில் தை மாதத்தில் வரும் முதல் நாளையொட்டி அம்மனுக்கு பால், தயிர், தேன், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், ஜவ்வாது, பன்னீர், உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்து ஸ்ரீ முத்துமாரியம்மனை வன்ன மலர்களால் அலங்கரித்து மாலை அணிவித்து சர்க்கரை பொங்கல் வைத்து சூரிய பகவானுக்கு சிறப்பு பூஜைகளுடன் மஹா தீபாராதனைகள் செய்து அம்மனை பெண்கள்,
மகளிர்குழுவினர், மற்றும் பொதுமக்கள் வழிபட்டனர். பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள்.


உலக நன்மைக்காகவும், பருவ மழை தவறாமல் பெய்து, தன தானியம் பெருகிடவும், பொதுமக்கள் நோய் நொடி இல்லாமல் இருக்க வேண்டும் என பொதுமக்கள் பிரார்த்தனை செய்தனர்..விழாவில் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் பூசரி நீதிதேவன் கோயில்நிர்வாகி கண்ணபிரான், காரியஸ்தர்கள் சக்ரவர்த்தி,அழகுமுத்து, ரத்தினவேல், கனகராஜ், சுப்ரமணி, ஹரி, மூப்பனார் பூசாரி ரமேஷ்,முக்கிய பிரமுகர்கள், மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *