சென்னை கிழக்கு மாவட்டம் திருவொற்றியூர் கிழக்கு பகுதி சார்பில் திராவிட பொங்கல் திருநாளை முன்னிட்டு மாபெரும் ஆண்கள் மற்றும் பெண்கள் பங்கேற்கும் இரண்டு நாள் கபடி போட்டி நடைபெற்றது
திருவெற்றியூர் அரசு கல்லூரி வளாகத்தில் உள்ள திடலில் நடைபெற்ற கபடி போட்டி சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து அம்பத்தூர் பெரம்பூர் சைதாப்பேட்டை பொன்னேரி ஆவடி எண்ணூர் மணலி வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கபடி வீரர்கள் பங்கேற்றனர்
இதில் ஆண்கள் அணி 40 அணிகளும் அதேபோன்று சென்னை சுற்று வட்டார பகுதியில் இருந்து கல்லூரி மாணவ மாணவிகள் கபடி விளையாட்டு வீரர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர் இதில் ஆண்கள் பிரிவில் 40 அணியம் பெண்கள் பிரிவில் 40 அணிகளும் கலந்து கொண்டது இரண்டு நாள் நடைபெற்ற இந்த கபடி போட்டியினை
சென்னை மாநகராட்சி மண்டல குழு தலைவர் தி மு தனியரசு தலைமை தாங்கி நடத்தி வைத்தார் இதில் திமுக மாவட்ட செயலாளர் மாதவரம் சுதர்சனம் முதல் போட்டியை வீரர்களை பாராட்டி பூவா தலையா போட்டு துவக்கி வைத்தார்
இதில் முதல் நாள் லீக் சிஸ்டம் முறையில் ஆண்கள் பிரிவில் இரண்டு அணிகளும் பெண்கள் பிரிவில் இரண்டு அணிகளும் இறுதி ஆட்டத்திற்கு தேர்வாகி இரண்டாவது நாள் நடைபெற்ற இறுதிப்போட்டியில்
அம்பத்தூர் 7 பிரதர்ஸ் அணி அதிக புள்ளிகளை எடுத்து வெற்றி பெற்று முதல் பரிசுக்கான கோப்பையை தட்டிச் சென்றது
அதேபோன்று இரண்டாவது பரிசை ஜாலி ப்ரைஸ் தன்டையார் பேட்டை அணி தட்டிச் சென்றது இதில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு மேடையில் அழைத்து பாராட்டி பரிசு கோப்பையும் ரொக்கப் பணத்தையும் மண்டல குழு தலைவர் திமு தனியரசு வழங்கி பாராட்டினார் இரண்டு நாட்கள் நடைபெற்ற போட்டியில் வீரர்களுக்கு மூன்று வேலையும் உணவு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.