அச்சிறுப்பாக்கம் பேரூராட்சியில் பொங்கல் விழா.

செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் பேரூராட்சியில் பொங்கல் விழா மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு பொங்கல் உதவி தொகை வழங்கும்
நிகழ்ச்சி நடைபெற்றது.

காஞ்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான
கா.சுந்தர், காஞ்சிபுரம் பாராளுமன்ற உறுப்பினர் சிறுவேடல் ஜி.செல்வம், ஆகியோரின் ஆலோசனைப்படி காஞ்சி தெற்கு மாவட்டம் முழுவதும் திமுக சார்பில் பொங்கல் நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி அலுவலகத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட
மாற்றுத்திறனாளி கௌரவ உறுப்பினர் லட்சுமி ஸ்ரீதர் ஏற்பாட்டில் பேரூராட்சியில் பணிபுரியும் 100 தூய்மை பணியாளர்களுக்கு பொங்கல் பண்டிகை மரியாதை செலுத்தும் விதமாக டிபன் பாக்ஸ் பொங்கல் உதவி தொகை மற்றும் இனிப்புகள் வழங்கி தூய்மை பணியாளர்களை கௌரவிக்கப்பட்டது. இந்நிகழ்வில் பேரூராட்சி மன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவர் மன்ற உறுப்பினர்கள் பேரூராட்சி அலுவலக பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *