திருவாரூர்,
17.01.2026,
“சுதந்திரம் அடைந்ததில் இருந்து வாங்கிய கடன் அளவிற்கு இந்த ஐந்து ஆண்டுகளில் திமுக அரசு வாங்கியுள்ளது… ஐந்து ஆண்டுகளில் 5 லட்சம் கோடி கடன் வாங்கியது திமுக அரசுதான்.. மக்களின் தலையில் கடனை சுமத்தியுள்ளார்கள் … அடிப்படை வசதிகள் எதுவும் செய்யவில்லை.. அடிப்படையான திட்டங்களுக்கு இந்த அரசில் நிதி ஒதுக்கீடு செய்யவில்லை.. நிலையான திட்டங்கள் இல்லை..”
திருவாரூரில் நடைபெற்ற எம்ஜிஆர் பிறந்த நாள் விழாவில் முன்னாள் அமைச்சர் காமராஜ் பேட்டி..
“புரட்சித் தலைவர் எம்ஜிஆர் -ன் 109- வது பிறந்தநாள் விழா.. முன்னாள் அமைச்சர் காமராஜ் எம்ஜிஆரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை..”ஏராளமான அதிமுகவே கலந்து கொண்டனர்.
அண்ணா திமுக பொதுச்செயலாளரும்..சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தமிழர் எடப்பாடியார் ஆணைக்கிணங்க.. தமிழகம் முழுதும் அதிமுக சார்பில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் 109- வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
. அதன் ஒரு பகுதியாக திருவாரூர் பகுதியில் புரட்சித்தலைவரின் 109-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்வில்..திருவாரூர் அதிமுக மாவட்ட செயலாளரும்,கழக அமைப்புச் செயலாளரும், நன்னிலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான.. முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ், திருவாரூர் புது தெருவில் உள்ள புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி புகழஞ்சலி செலுத்தினார்..
தொடர்ந்து அன்னதானம் வழங்கினார்.தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் காமராஜ்..”ஐந்து ஆண்டுகளில் 5 லட்சம் கோடி கடன் வாங்கியது திமுக அரசு.. மக்களின் தலையில் கடனை சுமத்தியுள்ளார்கள் … அடிப்படை வசதிகள் எதுவும் செய்யவில்லை.. அடிப்படையான திட்டங்களுக்கு இந்த அரசில் நிதி ஒதுக்கீடு செய்யவில்லை.. நிலையான திட்டங்கள் இல்லை.. என பேட்டி அளித்தார்.
இந்த நிகழ்வில்.. திருவாரூர் மாவட்ட அதிமுக பொருளாளர் ஏ. என். ஆர். பன்னீர்செல்வம்.. மாவட்ட அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் கலியபெருமாள், திருவாரூர் நகர செயலாளர் ஆர்டி மூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் மணிகண்டன், செந்தில், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் சின்ராஜ், மாவட்ட விவசாய அணி இணை செயலாளர் எம் ஜி ஆர் கருப்பையன் உள்ளிட்ட சார்பு அணி அனைத்து நிலை பொறுப்பாளர்கள்.. தொண்டர்கள் ஏராளமான கலந்து கொண்டனர்..
பேட்டி: ஆர். காமராஜ்,
(தமிழக முன்னாள் உணவுத்துறை அமைச்சர்)