பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்

பாபநாசத்தில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா….

அன்பழகன் எம்எல்ஏ 500 பேருக்கு பிரியாணி வழங்கினார் …

தஞ்சாவூர் வடக்கு மாவட்டம் பாபநாசத்தில் பழைய பேருந்து நிலையம் முன்பு சிறுப்பாண்மையினர் நல உரிமை பிரிவு சார்பில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா நடைபெற்றது.

விழாவிற்கு தஞ்சை வடக்கு மாவட்ட சிறுப்பான்மை பிரிவு அமைப்பாளர் அனிபா தலைமை வகித்தார் மாவட்ட துணை செயலாளர்கள் கோவி.அய்யாராசு , துரைமுருகன், ஒன்றிய செயலாளர்கள் தாமரைச்செல்வன், நாசர், பேரூர் செயலாளர் கபிலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் கும்பகோணம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் தஞ்சை வடக்கு மாவட்ட பொறுப்பாளருமான சாக்கோட்டை அன்பழகன் எம்எல்ஏ கலந்து கொண்டு 500 நபர்களுக்கு பிரியாணி வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட சிறுபான்மையினர் நல பிரிவு தலைவர் யூசுப் அலி,துணை அமைப்பாளர்கள் ராயல் அலி , பக்ருதீன் மைதீன் ,அன்சாரி ,இஸ்ரேல், ஷாஜகான், மற்றும் மாவட்ட ஒன்றிய பேரூர் நிர்வாகிகளும் சார்பணி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *