தேனி அருகே தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட கலெக்டர் தகவல்
தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள வீரபாண்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேனி மாவட்ட நிர்வாகம் வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை 23.01.2026. வெள்ளிக்கிழமை வீரபாண்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற உள்ளது
இத் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் 75 க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு வேலை தேடுபவர்களை தேர்வு செய்யவுள்ளனர் .
மேலும் பல திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் நிறுவனங்கள் கலந்து கொண்டு திறன் பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்புக்கு வேலை தேடுபவர்களை தேர்வு செய்ய உள்ளனர் இந்த முகாமில் 8 ஆம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு வரை மற்றும் பி.இ. டிப்ளமோ ஜ.டி.ஜ. உள்ளிட்ட இதர தகுதிகளு டைய அனைவரும் தங்களது அனைத்து கல்வி சான்றிதழ்களின் நகல்கள் மற்றும் ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் கலந்துகொண்டு வேலைவாய்ப்பு பெற்று பயன் பெறலாம் . இந்த முகாமில் பங்கேற்க இவ்வித நுழைவு கட்டணமும் இல்லை முகாமில் பங்கேற்கும் வேலை தேடுபவர்கள் https..//www.tnprivatejobs.tn.gov.in/என்ற இணையதளத்தின் மூலமும் தங்களது விபரங்களை பதிவேற்றம் செய்து முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்தெரிவித்தார்