அலங்காநல்லூர் ஜன.24-
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ முனியாண்டி கோவிலில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஜனநாயகன். படம் வெற்றியடைய வேண்டி வடக்கு மாவட்ட செயலாளர் விஜய் அன்பன் கல்லானை தலைமையில் நிர்வாகிகள் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.
முன்னதாக அலங்காநல்லூர் பகுதிக்கு வருகை தந்த மாவட்ட செயலாளருக்கு மேளதாளங்கள் முழங்க பட்டாசு வெடித்து நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர் அதனை தொடர்ந்து ஜல்லிக்கட்டில் வெற்றி பெற்ற காளைக்கு தங்ககாசு, அண்டா,பிளாஸ்டிக்சேர் உள்ளிட்டவைகளும் பொதுமக்களுக்கு அசைவஉணவு அன்னதானமும் வழங்கினர்.
.தேர்தல் ஆணையம் விசில் சின்னம் ஒதுக்கியதை தொடர்ந்து கேட்டுகடை பகுதியில் மாவட்ட செயலாளர் விஜய் அன்பன் கல்லானை தலைமையில் விசில் ஊதிச் சென்று பொதுமக்கள்இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
இதில் ஒன்றிய செயலாளர் விஜய்ஹரிஷ்,தளபதி ரஞ்சித்,மற்றும் ராமநாதன்,அய்யங்காளை,வெங்கடேஷ், புகழ், கார்த்தி, முத்துக்குமார் கிருஷ்ணமூர்த்தி, முத்து,உள்பட மாவட்ட ஒன்றிய கிளைக் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.