தேனியில் வாக்காளர் தினத்தினை முன்னிட்டு வாக்காளர் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்தார் தேனி மாவட்டம் தேனி பங்களா மேடு பகுதியில் தேசிய வாக்காளர் தினத்தினை முன்னிட்டு வாக்காளர் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி ஆண்டுதோறும் ஜனவரி 25 ஆம் தேதி தேசிய வாக்காளர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது 18 வயது பூர்த்தியடைந்த அனைத்து இந்திய குடிமக்களும் வாக்காளர் பட்டியலில் இடம் பெற வேண்டும் ஒவ்வொரு தேர்தலின் போது அனைவரும் தங்களது வாக்குரிமையை செலுத்துவதை உறுதி செய்ய வேண்டும் குறிப்பாக கல்லூரி மாணவர்களில் 18 வயது பூர்த்தியடைந்த இளம் வாக்காளர்கள் வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களுக்கு நேரில் சென்று அல்லது voter helpline App என்ற கைப்பேசி செயலி அல்லது voters.eci.gov.in என்ற இணையதளம் முகவரி வாயிலாகவும் விண்ணப்பித்து வாக்காளர் அடையாள அட்டை பெறலாம் ஏற்கனவே பதிவு செய்தவர்கள் தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும். இது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வகையில் தேனி கம்மவார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்களின் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் கொடியசைத்து துவக்கி வைத்தார்