இந்திய தேர்தல் ஆணையம் தமிழக வெற்றி கழகத்திற்கு ‘விசில்’ சின்னத்தை ஒதுக்கியுள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் அக்கட்சியினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பேருந்து நிலையம் அருகே தவெக ஒன்றியச் செயலாளர் சரண் தலைமையில் நடைபெற்ற கொண்டாட்டங்களில், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. தொண்டர்கள் விசில் அடித்தும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.