வாணியாறு அணையில் இருந்து 55 நாட்களுக்கு விவசாய பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது

தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தில் உள்ள வாணியாறு நீர்த்தேக்க அணையிலிருந்து, 2025-2026 விவசாயிகள் பயன் பெரும் வகையில் புதிய மற்றும் பழைய ஆயகட்டுகள் வழியாக விவசாய பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, தமிழக முதல்வரின் அறிவுறுத்தல்படி, மாவட்ட ஆட்சியரின் ரெ.சதிஷ் உத்தரவின்படி இன்று (பிப்ரவரி 6) தண்ணீர் விடப்பட்டது.

பாப்பிரெட்டிப்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள 10,517 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பாசனம் வழங்கும் வகையில், புதிய ஆயக்கட்டு பகுதிகளுக்கு சுழற்சி முறையில் ஏப்ரல் 1 வரை 55 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும்.

மீதமுள்ள நீரை பழைய ஆயக்கட்டு பகுதிகளுக்கு பயன்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது விவசாயிகள் நீர்வளத்துறை அதிகாரிகளுடன் ஒத்துழைத்து, தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்தி அதிக விளைச்சல் பெறுமாறு அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அரசாணையில் குறிப்பிட்ட தேதிக்குப் பின் எந்தக் காரணத்தாலும் பாசனத்திற்காக தண்ணீர் நீட்டிக்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *