வடசென்னையில் காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் இயக்கப்பட்டு வந்த சூரை மீன்களைப் பிடிக்கும் டிராலர் வகை விசைப் படகுகளுக்காக திருவொற்றியூரில் குப்பத்தில் ஆழ்கடல் மீன்பிடித் துறை முகம் அமைக்கப்பட்டுள்ளது.

ஆனால், துறைமுகத்தில் இதே பகுதியைச் சேர்ந்த பைபர் படகு களை மீனவர்கள் நிறுத்தி மீன்பிடித் தொழிலை மேற்கொண்டனர். இதனால், இத்துறைமுகத்தைத் தொடர்ந்து சிறிய பைபர் படகுகளை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டது.

எனவே, பைபர் படகுகளை நிறுத்தி வைக்கும் வகையில் புதிய மீன்பிடித்தளம் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுப் பப்பட்டது.

இதையடுத்து, பாரதியார் நகர் கடற்கரையையொடி, ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள 2 தூண்டில் வளைவுகளின் நீளத்தை சுமார் 90 மீ அதிகரித்து புதிய மீன்பிடித் தளத்தை ரூ.5 கோடியில் அமைக்கும் திட்டத்துக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்தது.

இத்திட்டம் திருவொற்றியூர் எண்ணூர் பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மீனவர்களுக்கு உதவிகரமாக இருக்கும். இதற்கான பணிகளை
மேற்கொள்வதற்கன பூமி பூஜை திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர் தலைமையில் பூமி பூஜை போடப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டு பணி துவங்கப்பட்டது

இந்த பணியானது இரண்டு மாதங்களுக்குள் முடிக்கப்பட்டு புதிய மீன்பிடித் தளம் செயல் பாட்டிற்கு வரும் எனத் தெரிவிக் கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் மீன்பிடித் துறைமுக உதவி இயக்குநர் திருநாகேஸ்வரன், திமுக நிர்வாகிகள் வை.ம. அருள்தாசன், கே.பி.சொக்க லிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *